search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஸ்டா ரிகா"

    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து இடையேயான லீக் போட்டி டிரா ஆனது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SUICRC

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ‘ஈ’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் பலப்பரீட்சை செய்தன. கோஸ்டா ரிகா அணி ஏற்கனவே தொடைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த போட்டி சுவிட்சர்லாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜிமைலி சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.  



    கோஸ்டா ரிகா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் கெண்டால் வாஸ்டன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப் ட்ரெமிக் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கோஸ்டா ரிகா அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அதில் சுவிட்சர்லாந்து அணியின்  அந்த அணியின் யான் சோமர் எதிரணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார்.



    அதன்பின் இறுதிவரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SUICRC
    ×